Monday, June 14, 2021

ஆயிரம் நிலவே வா



ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட 

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க 
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன 
இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ -- (ஆயிரம் நிலவே)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ 
கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்த வாய் வெளுக்கும் 
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ 
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக -- (ஆயிரம் நிலவே)

அல்லி மலர் மேனியிலே ஆடையென நானிருக்க 
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெரும் 
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ 
இன்பம் இதுவோ இன்னும் ஏதுவோ தந்தாலும் ஆகாதோ -- (ஆயிரம் நிலவே)

பொய்கை எனும் நீர் மகளின் பூவாடை போர்த்திருந்தாள் 
தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள் 
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ 
அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணர காட்டாயோ -- (ஆயிரம் நிலவே)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Sanskrit Learning